Tamil News
Tamil News
Sunday, 09 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

நமது நிலத்தின் ஊசியளவு பகுதியை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என நாம் இன்று பெருமையாக கூற முடியும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். 

வளர்ச்சிக்கு பங்காற்றும் பகுதி 

அருணாசல பிரதேசத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகை தந்து உள்ளார். அவர் கிபிதூ நகரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே பேசிய அவர், நமது நிலத்தின் இஞ்ச் இடத்தை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என நாம் இன்று பெருமையாக கூற முடியும் என்று கூறியுள்ளார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, வடகிழக்கு பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில், பிரதமர் மோடியின் கிழக்கை கவனிப்போம் கொள்கையால், வடகிழக்கு பகுதியானது நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் ஒரு பகுதியாகி விட்டது.

இந்தியாவின் முதல் கிராமத்திற்கு வந்துள்ளேன்

இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அவர்களது வீடுகளில் அமைதியாக உறங்க முடியும். ஏனெனில், நமது இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர் மற்றும் இந்திய ராணுவத்தினர் நமது எல்லை பகுதிகளில் இரவும் பகலும் பணியாற்றி வருகின்றனர். கிபிதூ இந்தியாவின் முதல் கிராமம். கடைசி கிராமம் அல்ல. முன்பெல்லாம் மக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்லும்போது, நாட்டின் கடைசி கிராமத்திற்கு சென்று வந்தேன் என கூறுவது வழக்கம். ஆனால் நான் இன்று, இந்தியாவின் முதல் கிராமத்திற்கு வருகை தந்துள்ளேன் என கூறுவேன் என பேசியுள்ளார். நம்முடைய நிலத்தின் ஊசியளவு பகுதியை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என நாம் இன்று பெருமையாக கூற முடியும். ஏனெனில், இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் நமது எல்லை பகுதிகளில் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமையாக பேசியுள்ளார்.