Tamil News
Tamil News
Monday, 10 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஓ. பன்னிர் செல்வத்திற்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இபிஎஸ்

2017 முதல் 2021வரை இ.பி.எஸ் தமிழக முதல்வராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில் இந்த காலத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான கட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கட்டப்பட்டது. இந்நிலையில் கட்டப்பட்ட கட்டங்களில் ஊழல் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக இ.பி.எஸ்-யிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இந்நிலையில் இந்த அனுமதியை தமிழக அரசு கடந்த வாரம் வழங்கியது. சில காலத்திற்குள்  இ. பி. எஸ்-யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தும் என்று கூறப்படுகிறது.

ஓபிஎஸின் சொத்துக்கள் வெளியே வரும்

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் “ மாநாடு நடத்துவதால், ஓ.பி.எஸ்-யிடம் இருந்த  ரூ.200 கோடி சொத்துக்கள் வெளியே வரும். ஓ.பி.எஸ்-யிடம் உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தினால் உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்பது தெரிய வரும். இதற்காக மத்திய,  மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.