Tamil News
Tamil News
Tuesday, 11 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பசு மாடுகளில் சிறுநீர் 

பசுவின் சிறுநீரை குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சில அமைப்பினர் கருத்துக்களை தெரிவித்தது மட்டுமல்லாம் அதை குடிப்பதை வீடியோவாகவும் வெளியிட்டு வந்தனர். இதற்கு அறிவியல் பூர்வமான ஆய்வு ஏதும் நடைபெறாத நிலையில், இந்தியா கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆராய்சிகளின் முடிவில் கருத்து தெரிவித்த இந்திய கால்நடை ஆராய்சி நிறுவனம், பசு மற்றும் எருமை மாடுகளின் 70 வகையான சிறுநீர் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளது. 


வயிறு மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்

மேலும், ஆய்வுகளின் அடிப்படையில் பசு மற்றும் எருமை மாடுகளின் சிறுநீர் மனித உடலுக்கு கேடு தருவதையும் எந்த விதத்திலும் மனித உடலுக்கு உகந்ததல்ல என்பது அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது. அதில், 14 வகையான பாக்டீரியாக்கள் உள்ளதாகவும், அதனால், மனித குடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.  

குறிப்பாக பசுமாட்டின் சிறுநீரை விட எருமை மாட்டில் சிறுநீர் அதிக பாதிப்பை ஏற்படுத்தவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில், பசு மற்றும் எருமை மாடுகளின் சிறுநீர் கடைகள் மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.