Tamil News
Tamil News
Tuesday, 11 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் தனி அக்கறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "எல்லாருக்கும் எல்லாம் என்ற உன்னதமான நோக்கம் கொண்ட திராவிட மாடல் அரசாக நமது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர தனி அக்கறை செலுத்தி திட்டங்களை தீட்டி வருகிறோம்.

ஆதிதிராவிடர் மக்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு நிதி

ஏப்ரல் 14-ந்தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு பணி நியமனம், கல்வி உதவித் தொகை, வீட்டுமனை பட்டா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.