Tamil News
Tamil News
Monday, 10 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

சமயபுரத்து அம்மா வந்திருக்கிறேன் எனக்கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அட்ராசிட்டி செய்த பெண்ணால், அடுத்த அன்னபூரணியா என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஜெயந்தி அம்மா அருள் வாக்கு டாட் காம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான மக்கள் பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்கள் கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். இந்த நிலையில், துறவி வேடம் அணிந்த ஒரு பெண் நெத்தியில் பட்டையும் கழுத்தில் கருப்பு நிற மணியும் அணிந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் அமர்ந்து நான் சமயபுரத்து அம்மா எனக் கூறி என்னை பற்றி தெரிய வேண்டுமென்றால் ஜெயந்தி அம்மா அருள் வாக்கு டாட் காம் என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என கூறினார். எதற்காக இங்கு அமர்ந்துள்ளீர்கள் என கேட்டதற்கு சும்மா பொழுது போகவில்லை வீட்டில் போரடிக்கிறது. அதனால்தான் வந்தேன் எனவும் ஈபி பில் தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் லஞ்சப் பணத்தை பிரித்துக் கொள்கிறார்கள் என சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக தான் மனு கொடுக்க வந்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.

நான் அழகாக இருக்கிறேனா?

ஆனால் அவர் திங்கள்கிழமை ஆனால் வருவதில்லை எப்போதாவதுதான் அவர் வருவார் என்றார். தொடர்ந்து அங்கு இருந்த போலீசார் சரி எந்திரிங்க என்று கூறிய போது, அதற்கு இருப்பா வயசாயிடுச்சுல்ல என்று லாவகமாக பேசினார். செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்து எவ்வளவு அழகாக படம் பிடிக்கிறார் என பாருங்கள் ஓம் சக்தி அண்ணாமலைக்கு அரோகரா என கூறி நான் அழகாக இருக்கிறேனா எனவும் சிரித்தபடியே கூறினார்.

இறையன்பு எனது அம்மாவின் தங்கச்சி பையன்

உங்கள் ஊர் என்ன என்று கேட்டதற்கு அறநிலையத்துறை ஆணையாளர் பிச்சாண்டி மனைவியின் தங்கை என கூறிய அவர் தலைமைச் செயலாளர் இறையன்பு எனது அம்மாவின் தங்கச்சி பையன் என கூறியதோடு அவர் யார் பெயரும் போடாதீர்கள் இறைவன் பெயர் மட்டும் போதும் என தெரிவித்தார்.

பேக்கை எடுத்துட்டு போய்டாதப்பா

சரி எந்திரிக்கவா என காவலரை பார்த்து கேட்டவர், இந்த பேக் நீங்க எடுங்க என சொல்லிவிட்டு, பேக்கை எடுத்துட்டு போய்டாதப்பா எனவும் நக்கல் அடித்தார். போதும் தம்பி என்னை எவ்வளவு நேரம் படபிடிப்ப நானே கவலையா இருக்கேன் எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது மீண்டும் அருள்வாக்கு ஜெயந்தி அம்மா டாட் காம் சென்று பாருங்கள் என்று கூறி ஓம் நமச்சிவாயா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.