Tamil News
Tamil News
Tuesday, 11 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறவுள்ளநிலையில், அதற்கான வேளைகளை செய்து வருகிறது பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள். இந்த தேர்தலுக்கான வேட்புமனு நாளை தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலானது நேற்றைய தினம் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. அதில் 189 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருக்கிறது. 

எடியூரப்பாவின் மகனுக்கு வாய்ப்பு

நடக்க இருக்கக்கூடிய கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 52 புதிய வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறது. கடந்த முறை கர்நாடக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய அதாவது, பாஜகவிற்கு தாவி ஆட்சி அமைக்க காரணமாக இருந்த மகேஷ் கும்ட ஹல்லிக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை சிக்காகாங் தொகுதியில் போட்டியிடுகிறார், எடியூரப்பா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தநிலையில், பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. 

2 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக அமைச்சர்கள்

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் வி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் தங்களுடைய அமைச்சர்களை களமிறக்கி உள்ளது பாஜக. குறிப்பாக, காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமாரை எதிர்த்து கனகபுராவில் வருவாய்த்துறை அமைச்சரான ஆர். அசோக் போட்டியிடுகிறார். சித்தராமையா போட்டியிடும் தொகுதியில் பாஜக தரப்பில் வி.சோமன்னா போட்டியிடுகிறார். அமைச்சர் சோமண்ணா மற்றும் ஆர்.அசோக் ஆகியோர் தலா 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. 

சூடுபிடித்த கர்நாடக அரசியல் களம்

பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் 32 பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பட்டியலினத்தவருக்கு 46 பேருக்கு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது பாஜக. அதேபோல், 8 பெண் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறது பாஜக. கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களுக்கு நிகரான அமைச்சர்களை நிறுத்தி இருக்கிறது பாஜக. நாளை முதல் வேட்புமனு தொடங்கவுள்ள நிலையில், கர்நாடக அரசியல் தற்போது சூடுபிடித்திருக்கிறது.