Tamil News
Tamil News
Wednesday, 12 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

விதிகளில் திருத்தம் செய்த இபிஎஸ்

அதிமுக கட்சியில் இபிஎஸ் – ஒபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த நிலையில், அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பிறகு ஓ. பன்னீர் செல்வத்தை அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதுவரை அதிமுகவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே இருந்து வந்த நிலையில், அக்கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய அங்கீகரிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ரிட் மனு தக்கல் செய்து இருந்தார். இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

திருத்தங்களை அங்கீகரிக்க மனு

இதனிடையே அ.தி.மு.க. விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை இதுவரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில், அந்த திருத்தங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதி மன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்து இருந்தார்இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கையும் டெல்லி உயர்நீதி மன்றம் முடித்து வைத்தது.