Tamil News
Tamil News
Wednesday, 12 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களின் செத்து விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. 

97 % முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்

அதன்படி இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் 97 சதவீதம் பேர் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் இருப்பதாகவும், சராசரியாக ஒருவருக்கு ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.510 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதில், ரூ.373 கோடி சொத்துகள் பாரம்பரிய சொத்துகளாக உள்ளது. கடந்த ஆண்டும் வெளியிடப்பட்டியலில் ஜெகன்மோகன் ரெட்டியே முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்த இடத்தில் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பேமா கண்டு ரூ.163 கோடி சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ.63 கோடி சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நவீன் பட்நாயக் மட்டும் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அடுத்தபடியாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ரூ.23 கோடி சொத்து மதிப்புடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு

அதேபோல், குறைந்த சொத்து மதிப்ப்புள்ள முதலமைச்சர்களின் பட்டியலையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக கேரள முதலமைச்சர் பிரணாயி விஜயன் ரூ.1.2 கோடி சொத்துக்களுடன் இருப்பதாகவும், அடுத்த இடத்தில் ஹரியான முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ரூ.1.3 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதில், பீகார் முதலமைச்சர்  நிதிஷ் குமார் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவருக்குமே ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சந்திரசேகர ராவ் மீது 63 வழக்குகள் 

இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து முதலமைச்சர்கள் மீது உள்ள வழக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்)  பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில், தெலங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்  மீது 63 வழக்குகள் உள்ளது. அதில், 37 வழக்குகள் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளதாகவும், மொத்த வழக்குகளில் பெரும்பாலானவை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மு.க.ஸ்டாலின் மீது உள்ள வழக்குகள்

இவருக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது 47 வழக்குகள் உள்ள நிலையில், அதில் 10 வழக்குகள் கடுமையான வழக்குகள் என்றும்  கூறப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது உள்ள 37 வழக்குகளில் 35 வழக்குகள் கடுமையான வழக்குகளாக பதியப்பட்டுள்ளது. 

அதிக குற்ற வழக்குகளை கொண்ட கேரளா எம்.பி

அதே சமயம், இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களின் 43 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர்கள் தவிர்த்து மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்களில் கேரளா நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியாகோஸ் என்பவர் மீது 204 வழக்குகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தப்படியாக திமுக நாடாளுமன்ற உறிப்பினர் கதிரேசன் என்பவர் மீது 99 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.