Tamil News
Tamil News
Sunday, 16 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

புரோமோஷன் பணிகளின் பொன்னியின் செல்வன் - 2 படக்குழு

திரையுலக பிரபலங்களான நடிகை திரிஷா மற்றும் நடிகர் ஜெயம்ரவி ஆகியோர் பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தவிர்த்து இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராய், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதன் படபடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில், படத்தின் புரோமோஷனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரசிர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ட்விட்டரில் பெயர் மாற்றம்

இந்நிலையில், இப்படத்தின் நடிகர், நடிகள் அனைவரும் படத்தின் புரோமோஷனுக்காக பொன்னியின் செல்வன் படத்தில் தாங்கள் நடித்த கதாப்பாத்திரத்தின் பெயர்களை தங்களது ட்விட்டர் கணக்குகளின் பெயர்களாக மாற்றிக் கொண்டனர். அந்த பெயர்களின் மூலம் அவர்கள் ட்விட்டரில் போட்ட பதிவுகள் அனைத்தும் பலரையும் கவர்ந்தது. 

ப்ளூ டிக்கை இழந்த பிரபலங்கள்

இந்நிலையில், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி ஆகியோரின் ப்ளூ டிக்குகள் நீக்கப்பட்டன. புதிய விதிகளின்படி, பெயரை மாற்றி கணக்குகளின் ப்ளூ டிக்குகளை ட்விட்டர் நிர்வாகம் நீக்கி வருகிறது. இந்த விதிகளின்படி, திரிஷா, ஜெயம்ரவி ஆகியோர் தங்களது ப்ளூ டிக்குகளை இழந்துள்ளனர். ஆனால், நடிகர் கார்த்தி, மற்றும் விக்ரம் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பே ட்விட்டர் கணக்கில் தங்களது பெயரை மாற்றியதால், அவர்களின் ப்ளூ டிக் தப்பித்தது குறிப்பிடத்தக்கது.