Tamil News
Tamil News
Sunday, 16 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறை அதிகாரி பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


விசாரணை கைதிகளின் பற்களி பிடுங்கபட்ட விவகாரம் 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்றப்பிண்ணனியில் கைதிகளாக உள்ளவர்களின் பற்களை உடைத்த விவகாரத்தில் காவல் உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தாக்கினார் என்ற புகார்கள் எழுந்தன.

பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்கு

இந்நிலையில், தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த நிலையில், பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பல்வீர் சிங் மீது தற்போது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்குதல், சித்தரவதை செய்தல் ஆகிய குற்றங்களுக்கான ஐ.பி.சி 326 பிரிவின் கீழ் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வீர் சிங் தொடர்பாக பிரச்னை சட்டப்பேரவையில் எழுந்த போது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதாலமைச்சர்மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.