Tamil News
Tamil News
Monday, 17 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

நேற்று நடந்த பெங்களூரு அணியுடனான போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் தல தோனி பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசியுள்ளார். 

3 வது வெற்றியை பதிவு செய்த சென்னை:

ஐபிஎல் 2023  தொடங்கிய நாள் முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்துவருகிறது. குறிப்பாக சென்னை அணி விளையாடும் ஆட்டம் என்றால் அங்கு கடைசி பந்து வரை பரபரப்பு நம்மை தொற்றிக் கொள்ளும். சுலபமாக ஜெயித்து விடுவார்கள் என்று எண்ணும் போது, ஆட்டத்தை மாற்றும் அளவுக்கான வீரர்கள் இந்த சீசனில் இருக்கிறார்கள். அந்த வகையில் நேற்று சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான லீக் போட்டி பெங்களூருவில் உள்ல சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

சின்னசாமி ஸ்டேடியம் சின்ன ஸ்டேடியம் என்பதால் அந்த மைதானத்தில் சிக்ஸர்களுக்கு பஞ்சமிருக்காது. முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்வாடுக்கு பந்து பேட்டில் படாமலேயே இருந்ததால் என்னவோ, அவர் சீக்கிரம் அவுட் ஆகிட்டார். அதன் பிறகு களமிறங்கிய ரஹானேவுடன் வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய கான்வே, 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பிறகு களமிறங்கிய சிவன் துபே ஆட்டத்தின் போக்கை வேகமெடுக்க செய்தார் என்றே சொல்லலாம். 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார் சிவம் துபே. கிட்டத்தட்ட 17 கிக்ஸர்களை சென்னை அணி அடித்தது. சென்னை - பெங்களூரு அணி சேர்த்து மொத்தம் 33 சிக்ஸர்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. 

20 ஓவர்களில் 227 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியின் தொடக்கம் பிரமாதமாக இருந்தது. ஃபாஃப் டூ பிளசிஸ் 33 பந்துகளில் 62 ரன்களும், 36 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல்லும், 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக்கும் கடைசி வரை பெங்களூரு ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர். ஆனால், ஆரம்பம் சரியாக இருந்து என்ன பலன், ஃபினிஷிங்க் சரி இருக்க வேண்டுமே என்பது போல, கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது. கடைசியாக சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. 

பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு சென்னை அணி தனது 3 வது வெற்றியை பதிவு செய்ததோடு, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

தோனி பேச்சு

இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி வெற்றி குறித்து பேசுகையில், “ பெங்களூருக்கு வரும்போது உங்களுக்கு தெரிந்து விடும். இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் தான் என்று. இரவு நேரத்தில் பனிப்பொழிவும் இருக்கும். இதற்கு தகுந்தார் போல் உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும். முதலில் ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருந்தது. அதனைக் கடந்து ரன் அடிக்கும் வேகத்தை அதிகரிப்பது முக்கியம். நாங்கள் ஆட்டத்தை சிம்பிளாகவே அணுகினோம். இரண்டாவது இன்னிங்ஸில் முடிந்த அளவுக்கு போராடினோம்” என்று பேசினார். 

 

அவர்கள் இருந்திருந்தால் பெங்களூருக்குத்தான் வெற்றி!

தொடர்ந்து பேசிய தோனி, “களத்திற்குள் வந்து விட்டால், அந்த வீரர் தான் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் 220 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதிரடியாக ஆடுவார்கள் என்பது தெரியும். டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள். நான் விக்கெட் கீப்பராக களத்திற்கு பின்னால் நின்று ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனித்துக் கொண்டு இருந்தேன். நான் போட்டியின் முடிவு குறித்து யோசிக்காமல் ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் யோசிப்பேன். இதனை நாம் சரியாக செய்தால் முடிவுகள் நமக்கு தகுந்தாற்போல் வரும்” என்று தோனி கூறினார்.