Tamil News
Tamil News
Tuesday, 18 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த சென்னை - பெங்களூரு இடையேயான போட்டியில் தோனி பேட் செய்ய வரும்போது விராட்கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சொன்ன வார்த்தை இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சென்னை - பெங்களூரு போட்டி

நேற்று நடைப்பெற்ற சென்னை - பெங்களூரு இடையேயான போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்வாடுக்கு பந்து பேட்டில் படாமலேயே இருந்ததால் என்னவோ, அவர் சீக்கிரம் அவுட் ஆகிட்டார். அதன் பிறகு களமிறங்கிய ரஹானேவுடன் வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய கான்வே, 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பிறகு களமிறங்கிய சிவன் துபே ஆட்டத்தின் போக்கை வேகமெடுக்க செய்தார் என்றே சொல்லலாம். 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார் சிவம் துபே. கிட்டத்தட்ட 17 கிக்ஸர்களை சென்னை அணி அடித்தது. சென்னை - பெங்களூரு அணி சேர்த்து மொத்தம் 33 சிக்ஸர்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. 

20 ஓவர்களில் 227 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியின் தொடக்கம் பிரமாதமாக இருந்தது. ஃபாஃப் டூ பிளசிஸ் 33 பந்துகளில் 62 ரன்களும், 36 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல்லும், 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக்கும் கடைசி வரை பெங்களூரு ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர். ஆனால், ஆரம்பம் சரியாக இருந்து என்ன பலன், ஃபினிஷிங்க் சரி இருக்க வேண்டுமே என்பது போல, கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது. கடைசியாக சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. 

மாஸ் எண்ட்ரி கொடுத்த ’தல’ தோனி

நேற்று நடந்த சென்னை - பெங்களூரு அணி இடையேயான போட்டியை நேரில் கண்டு ரசிக்க விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா வருகை தந்திருந்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. இறுதியாக கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மட்டுமே மீதமிருந்த நிலையில், சென்னை அணி கேப்டன் ’தல’ தோனி அரங்கம் அதிர மைதானத்திற்கு நுழைந்தார். அப்போது ரசிகர்கள் அனைவரும் தோனி…தோனி.. தோனி என்று கரகோஷமிட்டனர். 

அனுஷ்காவின் ரியாக்‌ஷன்

’தல’ தோனி  உள்ளே நுழைந்ததும் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷத்தை பார்த்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா “அவர்கள் அவரை நேசிக்கிறார்கள்” ( They Love Him ) என கூறியுள்ளனர். அவர் பேசிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.