Tamil News
Tamil News
Monday, 17 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை சர்வதேச அலை சறுக்கு போட்டி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மாமல்லபுரத்தில் மீண்டும் சர்வதேச போட்டி

விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் பத்திரிக்கையாளர்கை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சர்பிங் சங்கம், இந்திய சர்பிங் சம்மேளனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் முதல் முறைாக சர்வதேச சர்பிங் ஒபன் போட்டி நடத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில் ஆகஸ்டு 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது. சமீப காலங்களில், சர்பிங் விளையாட்டு ஊக்கு விப்பை தமிழ்நாடு முன்னின்று நடத்தி வருகிறது. தலை சிறந்த தேசிய சர்பிங் சம்பியன்கள் மூலம் 2028 ஒலிம்பிக் போட்டியில் நமது வீரர்கள் பதக்கம் வெல்வதில் அனைவரும் உறுதியாக உள்ளனர். 

சர்வதேச கபடி, கால்பந்து போட்டி நடத்த ஆலோசனை

இந்த லட்சிய நோக்கத்தை நனவாக்கும் வகையில் நம் சர்பிங் வீரர்களுக்கு அதி நவீன வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சிகள் வழங்கவும் சர்வதேச நிபுணர்கள் ஒத்துழைப்புடன் விளையாட்டு வீரர்களின் செயல் திறன் நிலைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் சர்வதேச அளவிலான கபடி, கால்பந்து போட்டிகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநில விளையாட்டு சங்கங்களுடன் பேசி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

போட்டிக்கான காசோலையை வழங்கிய உதயநிதி

இந்தப் போட்டிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 கோடியே 67 லட்சத் துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அலை சறுக்கு போட்டி சங்க தலைவர் அருண்வாசுவிடம் வழங்கினார்.