Tamil News
Tamil News
Tuesday, 18 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

துபாயில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நிதியுதவி அளித்து, யாரும் செய்யாததை செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

துபாயில் தீ விபத்து 

துபாயில் உள்ள பழமையான பகுதியான பிரிஜ்முரார் என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். அதில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமரஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம் (43) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த குடு என்ற முகமது ரபிக் (49) ஆகிய இருவர் உயிரிழந்தனர். 

செய்யாததை செய்த முதல்வர்

இந்தநிலையில், இந்தியாவைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்தநிலையில், எந்த மாநில முதல்வர்களும் வெளிநாட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்காதநிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

முதலமைச்சர் அறிக்கை

துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமரஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம் (43) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த குடு என்ற முகமது ரபிக் (49) ஆகிய இருவரும் கடந்த 15-ம் தேதி அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை இப்பணியில் துரித நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆருதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.