Tamil News
Tamil News
Tuesday, 18 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

திமுக தலைவர்களின் சொத்துப்பட்டியல் எனக்கூறி அண்ணாமலை நடத்திய செய்தியாளர் சந்திப்புக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். 

அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை இன்றை தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் "எங்கள் முதல்வர், எங்கள் பெருமை” என்ற தலைப்பில் வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் புகைப்படக் கண்காட்சி நடத்த அமைச்சர் கே.என்.நேரு ஏற்படு செய்துள்ளார். இதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் நேரு நேற்று புனித ஜோசப் கல்லூரிக்கு நேற்று சென்றிருந்தார். 

பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அண்ணாமலை சுமத்திய சொத்துப் பட்டியல் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “காவேரி மருத்துவமனையும், தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியும் என்னுடையது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ஓனர்கள் பாவம்,  அவங்க கஷ்டப்பட்டு கட்டி வச்சியிருக்காங்க, அத என்னோடதுனு சொன்னா அவங்க வருத்தப்படுவாங்க” என தெரிவித்தார். மேலும் அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும், அண்ணாமலை மீதும் வழக்கு தொடரப்படும் என தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு, “எங்களுடைய சொத்து பட்டியல் எல்லாம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது, அதற்கு மேல் சொத்து வைத்திருந்தாலோ அல்லது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாலோ, ஒன்றிய அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையுமே வந்து சோதனை செய்து வழக்கு தொடுப்பார்கள்” என தெரிவித்தார். 

அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் திமுக தலைவர்கள் பலர் கோடிக்கணக்கான சொத்துக்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் 2011ம் ஆண்டு மெட்ரோ ரயில் கொண்டு வந்ததில் ஊழல் செய்ததாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல சொகுசு கார்களை வைத்திருப்பதாகவும், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகன் ஆகியோர் பல ஆயிரம் கோடி சொத்துக்களை குவித்து வைத்திருப்பதாக பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இவரது குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது. பாஜக ஆதரவு சமூகவலைதளவாசிகள் இதனை டிரெண்ட் செய்து வந்தனர். 

செய்தியாளரை கலாய்த்த அமைச்சர் நேரு

மேலும் அமைச்சர் கே.நேரு செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர், தேர்தல் ஆணையத்தில் சமர்பித்திருக்கும் சொத்து மதிப்பிற்கும், அண்ணாமலை வைத்த குற்றச்சாடில் உள்ள குற்றச்சாட்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளதே என கேள்வி எழுப்பினார், அதற்கு அமைச்சர் கே.என்.நேரு “நீங்க எப்படியாவது சொல்லி, அந்த காவேரி ஹாஸ்பிட்டலை மட்டும் வாங்கி கொடுங்களேன்” என கலாய்த்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். மேலும் இறுதியில் அமைச்சர் கே.என்.நேரு, ஏப்ரல் 23 முதல் 30 வரை நடைபெற உள்ள முதலமைச்சரின் புகைப்படக் கண்காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தியை வெளியிடும்படி கேட்டுக்கொண்டார்.