Tamil News
Tamil News
Tuesday, 18 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

நிங்கலூ கிரகணம்

நிங்கலூ கிரகணம் என்று அழைக்கப்படும் ஒரு ஹைபிரிட் சூரிய கிரகணம் நாளை (ஏப்ரல் 20) நிகழ உள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது முழு சூரிய கிரகணமாக தோன்ற உள்ளது என்றும் வானத்தில் சில நிமிடங்களுக்கு முழு இருளையும், நெருப்பு வளையத்தையும் கொண்டு வரும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவில் தெளிவாக பார்க்க முடியும்

எனினும் இந்த ஹைபிரிட் சூரிய கிரகணத்தை பகுதி அளவாகவோ, முழுமையாகவே இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும். “நிங்கலூ” என்ற வார்த்தை ஆஸ்திரேலியாவின் நிங்கலூ கடல் பெயரில் இருந்து வைக்கப்பட்டது. இந்தியாவில் காண முடியாது என்றாலும் நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் கிரகணத்தை காணலாம். நாளை நிஹைபிரிட் சூரிய கிரகணம் உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன், முழு கிரகணமாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது.

குறுகிய நேரம் மட்டுமே நிகழும்

மேற்கு ஆஸ்திரேலியாவின் அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு நகரத்தில் மட்டுமே முழு கிரகணம் தெரியும். ஏப்ரல் 20-ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.34 முதல் 6.32 வரை கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்களுக்கு பகுதி சூரிய கிரகணம் ஏற்படும். இருப்பினும், அந்த நேரத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு 4.29 முதல் 4.30 வரை முழு கிரகணம் தெரியும்.

தென்கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இருந்தால் பகுதி அளவு கிரகணத்தை காண முடியும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.