Tamil News
Tamil News
Tuesday, 18 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

அனல் பறக்கும் கர்நாடகா தேர்தல் களம்

கர்நாடகாவில், சட்டமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அங்கு ஆளும் பாஜக கட்சினர் தொடர்ந்து 2 வது முறையாக ஆட்சியை கைப்பற்ற திட்டங்களை வகுத்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸும் மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. இதனால் பாஜக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவரான குமாரசாமியும் போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவி வருகிறது. 

காங்கிரஸின் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்

இந்நிலையில், பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்தவருமான ஜெகதீஷ் ஷெட்டர் அம்மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார். இந்தமுறை பாஜக தனக்கு சீட் வழங்காத நிலையில், கட்சியிலிருந்து விலகி  காங்கிரஸில் அண்மையில் இணைந்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிகாக தேர்தல் பணியாற்றி வரும் ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடகாவின் ஹூப்ளி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த முறை மக்கள் ஆதரவு காங்கிரஸிற்கு தான்

பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது, நான் இதுவரை 6 தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். ஆனால் தற்போது 7 முறையாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் சமயத்தில் கடந்த 6 முறை இருந்ததை விட தற்போது மக்களின் ஆதரவு எனக்கு அதிகரித்திருப்பதை காண்கிறேன். இதிலிருந்தே மக்களின் எண்ண ஓட்டம் தெளிவாக தெரிகிறது. இந்த மக்கள் ஆதரவின் மூலம் இந்த முறை காங்கிரஸிற்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.