Tamil News
Tamil News
Wednesday, 19 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

டிஎன்பிஎஸ்சி அமைப்பில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் விரைவில் டிஜிபி சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி

தமிழக அரசுத் துறைகளுக்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் அலுவலர்களை தேர்வு செய்து கொடுப்பதில் டிஎன்பிஎஸ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பில் தலைவர் பதவிக்கான பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருக்கின்றன. தற்போதுள்ள 4 உறுப்பினர்களில் ஒருவர் தற்காலிக தலைவர் பொறுப்பை வகிக்கும் நிலையில், மீதமுள்ள 3 பேரில் கிருஷ்ணகுமார் என்பவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 

விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராகும் டிஜிபி

டிஎன்பிஎஸ்சி அமைப்பில் 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் டிஎன்பிஎஸ்சி பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படும். இந்தநிலையில், ஜூன் மாதம் டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெறும் சைலேந்திரபாபு, டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சைலேந்திர பாபுக்காகவே தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.