Tamil News
Tamil News
Thursday, 20 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஐஐடியில் தற்கொலைகள் அரங்கேறுவதை தடுக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு ஐஐடி கவுன்சில் கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது சென்னை ஐஐடி-யில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை.   

ஐஐடி கவுன்சில் கூட்டம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 55-வது ஐஐடி கவுன்சில் கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 ஐஐடி-க்களைச் சேர்ந்த இயக்குநர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கூட்டத்திற்குத் தலைமை தாங்கி பேசினார்.

தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை

"கடந்த ஐந்து வருடங்களில் 2544 ஓபிசி மாணவர்கள், 1362 எஸ்சி மாணவர்கள் மற்றும் 538 எஸ்டி மாணவர்கள் என பல்வேறு ஐஐடிகளில் பாதியிலேயே படிப்பை நிறுத்தியிருக்கிறார்கள். சென்னையில் 2 மாணவர்களும் மும்பையில் ஒரு மாணவரும் தற்கொலை செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நிகழக்கூடாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதுபோன்ற தற்கொலைகள் அரங்கேறுவதை தடுக்க வேண்டும்" என்று கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

பாகுபாடு இருக்கக்கூடாது

மேலும், "ஐஐடி-க்களில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. மாணவர்கள் மன அழுத்தமின்றி படிப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாணவர்களுக்கு பேராசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார். இதற்கான மையங்கள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், மாணவர்களின் தாய்மொழியிலேயே படிப்பதற்கான வழிமுறைகளை ஐஐடிக்கள் மேற்கொள்ள வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார்.

சென்னை ஐஐடி-யில் மாணவர் தற்கொலை

ஐஐடியில் தற்கொலைகள் அரங்கேறுவதை தடுக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு ஐஐடி கவுன்சில் கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது சென்னை ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கேதார் சுரேஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாணவரின் உடலை கோட்டூர்புரம் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.