Tamil News
Tamil News
Thursday, 20 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

பட்ஜெட்

2023-24-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

மானிய கோரிக்கை மீதான விவாதம்

கூட்டத்தில் மார்ச் 23-ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என்றும், பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 21-ம் தேதி தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மார்ச் 28-ம் தேதி முதல் பல்வேறு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்றும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்தி வைப்பு

அறிவிக்கப்பட்டபடி, ஒவ்வொரு துறைகள் மீதான விவாதம் நடைபெற்றது. கடைசி நாளான இன்று காவல்துறை மீதான விவாதம் நடைபெற்று முடிந்திருக்கிறது. மேலும், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு பல்வேறு கட்சியினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு காரசாரமாக சட்டப்பேரவை தேதி குறிப்பிட்டபடி நடைபெற்று முடிந்திருக்கிறது. 

இறுதியாக, பேரவை விதி 25(1)-ன் கீழ் பேரவை மீண்டும் கூடும் நாள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பெறலாம் எனும் தீர்மானத்தை முன்மொழிந்தார் அவை முன்னவர் துரை முருகன். பிறகு, அவைத்தலைவர் தேதி குறிப்பிடாமல் பேரவையை ஒத்தி வைத்தார்.