Tamil News
Tamil News
Sunday, 23 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்ற சென்னை அணி டேபிள் டாப் சென்றுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். 

சென்னை - கொல்கத்தா

கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த சென்னை அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் வழக்கமாக செய்யும் எந்த தவறும் செய்யாமல் அபாரமாக ஆடினர். கான்வே, ருதுராஜ், ரஹானே, ஷிவம் துபே, ஜடேஜா என அனைவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை இலக்காக வைத்த அணி என்ற பெருமையை சென்னை அணி பெற வழிவகுத்தனர். களமிறங்கிய ஒவ்வொரு பேட்ஸ்மேனும் குறைந்தபட்சம் 2 சிக்ஸர்களாவது அடித்தனர். 20 ஓவர் முடிவில் 235 சென்னை அணி எடுக்க, சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியது கொல்கத்தா. இதையடுத்து ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

முதலிடம் பிடித்த சென்னை

நடப்பு தொடரில் சிஎஸ்கே பெறும் 5வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்ற சீசனில் பிளே ஆஃப்க்கு சென்னை அணி போகாத சோகத்தில் இருந்த சென்னை அணி ரசிகர்களுக்கு தற்போது சென்னை அணி டேபிள் டாப் பிடித்துள்ளது மிகப்பெரும் சந்தோஷத்தையும் நம்பிக்கையும் கொடுத்துள்ளது. அதோடு இந்த சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கும்பட்சத்தில் சென்னை அணி தோனிக்கு பரிசாக ஐபிஎல் கோப்பையை கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆர்வத்தோடு இருந்து வருகின்றனர். 

அடுத்தடுத்து எந்த அணிகள்!

அதேநேரம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் முறையே 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. எனினும் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் இரண்டாமிடமும், லக்னோ மூன்றாமிடத்திலும் உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 5 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இதேபோல், 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று ஆர்சிபியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.புள்ளி பட்டியலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.