Tamil News
Tamil News
Monday, 24 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

முதல்டத்தில் உள்ள ஆஸ்திரேலியா

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியானது இந்தாண்டு ஜூலையில் லண்டனில் நடைபெற உள்ளது. இதன் விதிகளின்படி, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 9 அணிகளும் இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 6 தொடர்இன் விளையாட வேண்டும். அதில் 3 தொடர் உள்நாட்டிலும், 3 தொடர் எதிரணி நாட்டிலும் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்படும். அதன்படி முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி விளையாடிய 6 டெஸ்ட் தொடர்களில் 10 போட்டியில் வெற்றியும் 5 போட்டியில் தோல்வியும், 2 போட்டியில் ட்ராவும் கண்டுள்ளது. இதனால் இந்திய அணி 123 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல், 6 தொடர்களில் 11 போட்டியில் வெற்றியும் 3 ல் தோல்வியும், 4 ட்ராவும் கண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 148 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மீண்டும் இடம்பெற்ற ரஹானே

இதனால் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள இறுதி போட்டி வரும் ஜூலை 7 ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில்ம் ராஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு பிறகு ராஹேனே மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். டெஸ்ட் அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருந்த ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக இத்தொடரில் ஆட முடியாததால், ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரஹானே தற்போது  ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் வாய்ப்பு வழங்ப்பட்டுள்ளது. இத்தொடருக்கு ரோஹித்  ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கே.எஸ். பாரத் என்பவருக்கும் புதியாக வாய்ப்புப் பு வழங்ப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


இத்தொடருக்கான வீரர்கள் விவரம் 

ரோஹித் ஷர்மா (கேப்டன்) ஷுப்மன் கில், செட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானே, கே.எல்.ராகுல், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்) ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், சர்துல் தாகூர், மொஹம்மது சமி, முஹமது சிராஜ், உம்ர்ர்ஷ் யாதவா, ஜெயதேவ் உனட்கட் ஆகியோர்  தேர்வாகியுள்ளனர்.