Tamil News
Tamil News
Tuesday, 25 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்களுக்கானதா..?

தமிழ்நாடு அரசு அண்மையில், நில ஒருங்கிணைப்பு மசோதா கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துடன் கண்டனமும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்களுக்கானதா? தனியார் நிறுவனங்களுக்கானதா? என்று கேள்வி எழுப்பியதுடன், அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதா கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். 

தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு செயல்படுகிறது

தனியார் நிறுவனம் 100 ஏக்கருக்கு மேல் வைத்திருந்தால், அந்த பகுதிக்குள் இருக்கும் நீர் நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ளலாம் என சட்டம் சொல்கிறது என்றும், ஆனால் ஏழை மக்கள் நீர்நிலைகளில் வீடு கட்டினால் ஆக்கிரமிப்பு என்றும் கூறி அரசு அதனை அகற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் ஏழைகளுக்கு ஒரு சட்டம், பணக்கார நிறுவனங்களுக்கு ஒரு சட்டமா? என கேள்வியெழுப்பியதுடன் தமிழக அரசு தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக விமர்னம் செய்துள்ளார்.