Tamil News
Tamil News
Thursday, 27 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

200 வது போட்டியில் ராஜஸ்தான்

இந்த ஐபிஎல் தொடரின் 37 வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,  சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஐபிஎல் -ல் தனது 200 வது போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே அதிரடியா விளையாண்ட ராஜஸ்தான் அணி சென்னை அணியின் பந்து வீச்சை சிதறடித்தது. இதனால் அந்த அணியின் ரன் ரேட் எதிர்பார்த்ததை விட அதிகரித்தது. குறிப்பாக பவர் ப்ளேவின் ராஜஸ்தானின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 26 பந்து அரைசதம் அடித்தார். நடப்பு தொடரில் அவர் தொடர்ச்சியாக அடித்த 3 வது அரை சதமாகும். 

200 ரன்களை கடந்த ராஜஸ்தான்

இந்நிலையில், முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்கார ஜோஸ் பட்லர் 27 ரன்கள் (21 பந்து) எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு களம் இறங்கிய வீரர்கள் நிதானமாக ஆட ஜெய்ஸ்வால் அதிகாட்டி ரன் ரேட்டை எகிற வைத்தார். இவருக்கு மற்ற வீரர்களும் நல்ல ஒத்துழைப்பு தர ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 77 ரன்களும், ஜூரல் 15 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை தரப்பில் தேஷ் பாண்டே 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் சென்னை அணிக்கு 203 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 


ஏமாற்றிய சென்னை

இதனையடுத்து களம் இறங்கிய சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடக்கம் முதலே நிதானம் காட்டி வந்தனர். ராஜஸ்தான் பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினர். இதனால் தொடக்க வீரர் கான்வே 16 பந்துகளை எதிர் கொண்டு 8 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். மற்றொருபுறம் அதிரடியாக ஆடிய ருதுராஜ் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கடுத்து பெரிதும் எதிர்பார்ப்புக்கிடையே ரஹானே களமிறங்கினார். நிதானமாக விளையாடிய அவர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணி 3 விக்கெட்டுக்கு 73 ரன்களில் தடுமாறியது.

இதன் பிறகு களமிறங்கிய சென்னை வீரர்கள் ஓரளவு அதிரடி காட்டிய நிலையில், சென்னையின் தோல்வியை தடுக்கமுடியவில்லை. 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரின் 2 போட்டியிலுமே சென்னை அணி ராஜஸ்தானுடன் தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வரும் அடுத்த போட்டியில் சென்னை அணி   தனது அடுத்த ஆட்டத்தில், வரும் 30 ம் தேதி பஞ்சாபை எதிர்கொள்கிறது.