Tamil News
Tamil News
Friday, 28 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

புகாரளிக்க சென்றவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

திருச்சி மாவட்டம் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றிய ராஜா என்பவர், தனது தம்பியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை விசாரித்த லால்குடி உதவி ஆய்வாளர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், காவல்நிலையத்தில் தாக்கியதாவும் சொல்லப்பட்ட நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான ராஜா காவல்நிலையம் முன்பு தீக்குளித்தார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நீதிபதிகளிடம் மரண வாக்குமூலம் அளித்த ராஜா

முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நீதிபதிகளிடம் ராஜா வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு விசாரணையின் போது உள்ளாடையுடன் நிற்க வைத்து தன்னை தாக்கிய லால்குடி காவல் உதவி ஆய்வாளர் பொற்செழியன், தனது தம்பி நிர்மல் அவரது மனைவி, அவரது மகள் ஆகிய நால்வர் தான் காரணம் என்ன வாக்குமூலம் அளித்துள்ளார். 

உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

ராஜாவின் வாக்குமூலத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டடு உடலை வாங்க மறுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில், அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இந்த 4 பேர் மீதும் வழக்கு பதியப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எஸ்ஐ ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.