Tamil News
Tamil News
Tuesday, 02 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி வீரர்கள் விளையாடும் இத்தொடருக்கு இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும். தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரின் 45 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. 

கடைசி 2 போட்டியிலும் தோல்வியடைந்த சென்னை

சென்னை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, 5 ல் வெற்றியும் 4ல் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 4 வது இடத்தில் இருந்து வருகிறது. தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாபை எதிர் கொண்ட சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. கடைசி பந்து வரை சென்ற இப்போட்டியில் நூலிழையில் சென்னை அணி வெற்றியை தவறவிட்டது. அதேபோல இப்போட்டிக்கு முன்னதாக ராஜஸ்தானுடனான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியே கண்டது. கடைசி 2 போட்டியிலும் தோற்ற சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டி வருகிறது. பேட்டிங்கை பொறுத்தவரை சென்னை அணி வீரர்கள் ரஹானே, ருதுராஜ், கான்வே, தோனி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. சென்னை அணி அவ்வப்போது பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், சில நேரங்களில் சொதப்பி வருவது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் சென்னை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர். 

பழிதீர்க்குமா லக்னோ..? 

லக்னோ அணியை பொறுத்தவரை 5 ல் வெற்றியும் 4ல் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 4 வது இடத்தில் இருந்து வருகிறது. கடைசியாக பெங்களுருவுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தது. அந்த போட்டியில் பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கும் லக்னோ அணியின் பேட்டிங் பயிற்சியாளரான காம்பீருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் பெரும் சர்ச்சையானது. இப்போட்டியில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதேபோல், இந்த சீசனில் முன்னதாக நடந்த சென்னையுடனான ஆட்டத்திலும் லக்னோ தோற்று இருந்தது. இதனால் சென்னையை பழிதீர்க்கும் விதமாக இப்போட்டியில் வெற்றி பெற லக்னோ அணி முனைப்பு காட்டிவருகிறது. அத்துடன் தனது சொந்த மைதானத்தில் இப்போட்டி நடப்பதும் லக்னோ அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் தலா 10 புள்ளிகள் பெறும் நோக்கத்தோடும், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் நோக்கத்தோடும் விளையாடும் என்பதால் இப்போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.