Tamil News
Tamil News
Wednesday, 03 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

கணித ஆசிரியை தேவி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த  கோட்டப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி (வயது 38). எம்எஸ்ஸி பிஎட் பட்டதாரி இவர் துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பணி நிமித்தம் காரணமாக துறையூர் சித்திரைப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் தனது இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்த வாழ்ந்து வருவதாக தெரிகிறது . 
சந்தேகமடைந்த பெற்றோர்

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகளும் தேவி எடுத்த வந்த நிலையில், மாணவர்களிடம் அதிக நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.  இவரிடம் படித்த துறையூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவனின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர்கள் , தனது மகனின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர். இரவு நேரங்களில் ஆசிரியையுடன் அதிக நேரம் பேசி வருவதும் , படிப்பில் கவனமில்லாததாலும் , ஆசிரியையின் மீது மாணவனின் பெற்றோர்கள் புகாரளித்தனர் . புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி விசாரணை மேற்கொண்டார் . விசாரணையின் அடிப்படையில் ஆசிரியை தேவியை போக்சோ சட்டத்தி்ன் கீழ் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவனை சிறார் சிறையில் காவல்துறையினர் ஒப்படைத்தனர். ருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவனை சிறார் சிறையில் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.