Tamil News
Tamil News
Friday, 05 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

16 வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் 49 வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான சென்னை - மும்பை இன்று அணிகள் மோதுகின்றன. 

வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை..?

ஐபிஎல் தொடங்கிய காலம் முதல் தற்போது வரை தோனி தலைமையிலான சென்னை அணியின் ஆட்டம் விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. சென்னை அணியை பொறுத்தவரை வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. சென்னையின் கடந்த ஆட்டத்தில் ரக்னோவை எதிர்கொண்ட நிலையில், ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தற்போது சென்னை புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. குறிப்பாக ரஹானே, ருதுராஜ், கான்வே, ராயுடு ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பது சென்னை அணியின் பலமாக உள்ளது. தோனியின் கேப்டன்ஷிப்பும் அணிக்கு உந்துதலாக இருந்து வருகிறது. ஷிவம் துபே, மொயீன் அலி ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா (14 விக்கெட்) கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்கிறார். ஆனால் துஷர் தேஷ்பாண்டே (17 விக்கெட்), பதிரானா (7 விக்கெட்) ஆகியோர் கணிசமாக விக்கெட் வீழ்த்தினாலும் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவாக அமைந்துள்ளது. இப்போட்டி சென்னையில் நடப்பதால் சிஎஸ்கே அணிக்கு இது சாதகமாக பார்க்ப்படுகிறது. 


வெற்றியை தக்க வைக்குமா மும்பை..?

மும்பை அணியை பொறுத்தவரை அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி, 4-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த ஐபிஎல்லின் தொடக்கத்தில் தடுமாறிய மும்பை அணி பின் சுதாரித்துக் கொண்டு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டங்களில் 200-க்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்து (சேசிங்) சாதனை படைத்தது. இவ்விரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அரைசதம் விளாசினார். டிம் டேவிட், திலக் வர்மா, இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த 3 ஆட்டங்களில் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்த ரோகித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு திரும்பினால் மும்பை அபாயகரமான அணியாக மாறி விடும். 


எகிறும் எதிர்பார்ப்பு

ஏற்கனவே சென்னையிடம் தோல்வி அடைந்திருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் வரிந்துகட்டுவார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகள் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 15-ல் சென்னையும் வெற்றி கண்டுள்ளன. ஐபிஎல்லின் முக்கிய இரு அணிகள் மோதுவதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.