Tamil News
Tamil News
Friday, 05 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

மதிப்பு குறயாத தங்கம்

இன்றைய தேதியில் தங்கத்தின் இருப்பு என்பது மிக மிக அத்தியாவசியமானதாக பார்க்கப்படுகிறது. என்றும் உயர்ந்து கொண்டே இருக்கும் அதன் விலையே காரணம் என்பது தான் ஒப்புக்கொள்ள முடிந்த உண்மை. தற்போதைய சூழ்நிலையில், பணத்தை சேமிக்கவும், முதலீடு செய்யவும் பலருக்கு தோன்றும் ஒரே வழி தங்கம். பணத்தின் மதிப்பு என்றும் மறப்போவதில்லை. ஆனால் தங்கம் அந்த பட்டியலில் சேராது. இன்று விற்பனையாகும் 22 காரட் ஒரு கிராம் ரூ.5,692 ஆக உள்ளது.  அதே 22 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.45,536 ஆக உள்ளது. 24 காரட் தரம் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.6,209 ஆக உள்ளது. அதே 24 காரட் தரம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை, ரூ.49,672 ஆக உள்ளது. 


நடுத்தர குடும்பங்களின் சேமிப்பாக உள்ள தங்கம்

கடந்த 7,8 வருடங்களுக்கு முன்பு ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்த இதே தங்கத்தின் விலை தற்போது அதன் விலையும் மதிப்பும் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் வைத்திருப்பவர்கள் எப்போதும் பாதுகாப்பான சூழ்நிலையையே உணருவதாகவும் தெரிய வருகிறது. ஒரு கிராம் தங்கம் கூட விரையில் ரூ.10 ஆயிரத்தை தொடலாம் என்பது மறுக்க முடியாது என்றாலும், தங்கத்தின் தேவையையும் மதிப்பையும் இதன் மூலமே கணக்கிட்டுக் கொள்ளலாம். நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலானோரின் சேமிப்பாக தங்கம் இருந்து வருகிறது.

தங்களது எதிர்கால பணத்தேவைகளை பூர்த்தி செய்யும் தங்கத்தை பலர் தங்களது குடும்பங்களில் பாதுகாத்து வருகின்றனர். ஏழ்மை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்களாது பணத்தை வங்கியில் சேமிப்பதை விட தங்கமாக வாங்கி சேமிப்பதே சிறந்த சேமிப்பாக இருக்கும் என்பதும் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. குடும்பங்களின் எதிர்காலத்திற்கே தங்கம் தேவைபடும் போது நாட்டின் எதிர்காலத்திற்கும் தங்கம் நிச்சயம் தேவைப்படும் என்பதே தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வு முடிவுகள் வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளன. 

தங்கத்தை சேமிக்கும் வல்லரசு நாடுகள்


உலகின் பெரும் வல்லரசு நாடுகள் தொடங்கி ஏழ்மைகள் நாடுகள் வரை தங்கத்தை இருப்பு வைத்துள்ளன.  அந்த வகையில் அமெரிக்கா நாடு அதிகளவிலான தங்கத்தை இருப்பாக வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்கர்கள் அதிகம் தங்கத்தை ஆபரணமாக அணிய விரும்ப மாட்டார்கள் ஆனால் ஏதேனும் ஒரு வகையில், தங்கத்தை இருப்பு வைத்திருப்பார்கள். அதே போல தான் அந்நாட்டு அரசும் மெட்ரிக் டன் கணக்கில் தங்கத்தை இருப்பு வைத்துள்ளது. இன்றைய தேதி வரை அமெரிக்கா 8, 133 மெட்ரிக் டன் தங்கத்தை இருப்பாக வைத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், அதிகம் தங்கம் வைத்திருக்கும் இரண்டாவது நாடாக ஜெர்மணி உள்ளது. அந்நாட்டு அரசிடம் 3,355 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. 3 வது இடத்தில் இத்தாலி 2,452 மெட்ரிக் டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது. 2,437 மெட்ரிக் டன் தங்கத்துடன் ஃபிரான்ஸ் 4 வது இடத்திலும், 2,299 மெட்ரிக் டன் தங்கத்துடன் ரஷ்யா 5 வது இடத்திலும் உள்ளது.


சீனாவில் சமூக அந்தஸ்தான தங்கம்

தங்கத்தை ஆபரணமாக அணிய விருப்பம் காட்டாமல் பொருளாக பயன்படுத்துவது சீனர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அது அவர்களின் சமூக அந்தஸ்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சீனா அரசிடம் 2,011 மெட்ரிக் டன் தங்கம் இருப்பு வைத்து இந்த பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. 7 வது இடத்தில் 1,040 மெட்ரிக் டன் தங்கத்துடன் ஸ்விட்ஸர்லாந்தும், 8வது இடத்தில் 846 தங்கத்துடன் ஜப்பானும் உள்ளது.


இந்தியா..?


தங்கத்தில் தனிநபர் பயன்பாடுகள் அதிகம் கொண்ட நாடாக இருப்பது இன்றைய தேதியில் இந்தியா மட்டுமே. இந்திய குடும்பங்கள் மட்டுமே தங்கத்தை சேமிக்கவும் அதனை ஆபரணங்களாக அணிவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமே சுமார் 90 சதவீத குடும்பங்கள் தங்கத்தை சேமிப்பாக வைத்துள்ளனர். குடும்பங்களின் தேவைக்கு தங்கம் இன்றியமையாததாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்திய அரசிடம் தற்போது 787 மெட்ரிக் டன் தங்கம் இருப்பாக உள்ளது. இந்த பட்டியலில் இந்திய 9 வது இடத்தில் உள்ளது. அதேபோல், 612 மெட்ரிக் டன் தங்கத்துடன் நெதர்லாந்து 10 வது இடத்தில் உள்ளது. 

மற்ற ஆசிய நாடுகளின் தங்கத்தின் இருப்புகள்

இந்த பட்டியலில் மற்ற ஆசிய நாடுகளான பாகிஸ்தானிடம் 64 மெட்ரிக் டன் தங்கமும், மலேசியாவிடம் 38 மெட்ரிக் டன் தங்கமும் இந்தோனியாவிடம் 78 மெட்ரிக் டன் தங்கமும், சிங்கபூரிடம் 154 மெட்ரிக் டன் தங்கமும், சவுதி அரேபியாவில் 323 மெட்ரிக் டன் தங்கமும், யுனைட் அரபு எமிரேட்ஸ் 79 மெட்ரிக் டன் தங்கமும் இருப்பு வைத்திருப்பதாக புள்ளி விவரங்களா தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் ஆப்பிரிக்க நாடான நைஜீரிய 21 மெட்ரிக் டன் தங்கத்தை இருப்பாக கொண்டு இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.