Tamil News
Tamil News
Sunday, 07 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

வடமாநில தொழிலாளர் விவகாரம் - யூடியூபர் மீது வழக்கு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் வெளியாகி தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில்  பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து இங்குள்ள வடமாநில தொழிலாளர்களிடம் தவறான கருத்துக்களை பேச வைத்து யூடியூபில் பதிவிட்டதற்காக மணீஷ் காஷ்யப் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் 19-க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர் வழக்குகள் போடப்பட்டது. மேலும், பீகார் மாநிலத்திலும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 

தள்ளுபடி செய்யக்கோரி யூடியூபர் மனுதாக்கல் 

இதையடுத்து, அவர் மீது தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு இடங்களில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறிக்கைகளை ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியும் மணீஷ் காஷ்யப் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

விசாரணை

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று (08.05.23) விசாரிக்கப்பட்டது. விசாரணையில் தமிழ்நாடு அரசு சார்பில், இவர் வேண்டுமென்றே தொடர்ச்சியாக இத்தகைய தகவலை வெளியிட்டு இருக்கிறார் என்றும், இதே கருத்தை பீகார் மாநில அரசு தரப்பிலும் சொல்லப்பட்டது. 

அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதிவிடக்கூடாது

வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, யூடியூபர் மணீஷ் காஷ்யப் தொடுத்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், தன் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் வைத்த கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது. மேலும், இந்த வழக்கில் தலைமை நீதிபதி தமிழ்நாடு குறித்து கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். அதாவது, தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதிவிடக்கூடாது என்று வலியுறுத்தி இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். 

ஆளுநருக்கு சம்மட்டி அடி 

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும், ஆளுநர் போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடியாகவும் அவரது கருத்து பார்க்கப்படுகிறது. அதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கோவை குண்டு வெடிப்பு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடி விஏஓ கொலை, போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தல் போன்ற சம்பவங்களால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்பதை எப்படி கூற முடியும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பி இருந்தார். இந்தநிலையில், தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.