Tamil News
Tamil News
Wednesday, 10 May 2023 00:00 am
Tamil News

Tamil News

16 வது ஐபிஎல் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரின் 55 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சென்னையில் இன்று எதிர்கொள்கிறது. 

பலம் வாய்ந்த சென்னை

13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியல் 2 வது இடத்தில் உள்ள சென்னை அணி தனது முந்தைய போட்டிகளில் கொஞ்சம் தடுமாறினாலும், கடைசியாக நடந்த மும்பை அணியுடனான போட்டியில், அந்த அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது சென்னை. தோனி தலைமையிலன சென்னை அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ராஹானே, ருதுராஜ், கான்வே ஆகியோருடன் கேப்டன் தோனியும்  சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பந்துவீச்சில் சென்னை அணியின் மதிஷா பத்திரானவின் பந்துவீச்சு ச்சிறப்பாக உள்ளாது. இக்கட்டான சமயத்தின் சிறப்பாக பந்து ரன்களை கட்டுப்படுத்துவதில் கில்லியாக இருந்து வருகிறார். இந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு எளிதாகவிடும் என்பதால் வெற்றிக்காக சென்னை அணி போராடும் என்பதில் சந்தேகமேயில்லை. அதேசமயம் சொந்த ஊரில் இப்போட்டி நடைபெறுவதால் சென்னை அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. 

எழுச்சி பெற்ற டெல்லி

டெல்லி அணியை பொறுத்தவரை தொடக்கத்தில் தடுமாறினாலும், அவ்வப்போது வெற்றிகை பெற்று வருகிறது. தற்போது கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு இப்போட்டி வாழ்வா? சாவா போட்டியாகும். இதில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும். வார்னர் தலைமையிலான டெல்லி அணி கடைசியாக நடந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. கடைசியாக நடந்த போட்டியில், பலம் வாய்ந்த பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், டெல்லி அணி அதே உற்சாகத்துடன் களமிறங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 17முறையும், டெல்லி அணி 10 முறையும் வென்றுள்ளன.

மைதான கண்ணோட்டம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஆடுகளத்தின் மேற்பரப்பு திடமாகவும் வறண்டதாகவும் உள்ளது. இதனால், அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். முற்பாதியில், பேட்டிங்கிற்கும் இரண்டாம் பாதியில், பந்துவீச்சுக்கும் சாதகமாக இருக்கும் என்பதால், இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில்,  இரு அணிகள் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.