Tamil News
Tamil News
Saturday, 13 May 2023 00:00 am
Tamil News

Tamil News

கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தநிலையில், தற்போது பெரும்பான்மைக்கான 113 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. 

* கர்நாடக முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய பசவராஜ் பொம்மை முடிவு

* தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்வோம் - பசவராஜ் பொம்மை 

* காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

* புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கூடி முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுப்பார்கள் - சித்தராமையா 

* ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், மூன்றாவது பெரிய கட்சியாக வர வாய்ப்புள்ள எச்.டி. குமாரசாமியின் மத சார்பற்ற ஜனதா தளம் அடுத்த ஆட்சி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

* அதேநேரத்தில், "அடுத்த ஆட்சியை நாங்களே தீர்மானிப்போம், கிங் மேக்கர் அல்ல, நாங்களே 'கிங்'காக வருவோம்" என்று மத சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் எச்.டி. குமாரசாமி நம்பிக்கையுடன் இருக்கிறார். இதில், யாருடைய எண்ணம் ஈடேறப் போகிறது என்பது நண்பகல் வேளையில் தெளிவாகி விடும்.

* கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் பட்சத்தில், முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கா? டி.கே.சிவகுமாருக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது. "பா.ஜ.க.வை ஆட்சியமைக்க விடாமல் செய்ய எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலனுக்காக எனது தந்தை முதலமைச்சராக்கப்பட வேண்டும்" என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.

* காங்கிரஸ் வேட்பாளர்களை ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு அழைத்து வர அக்கட்சி திட்டம் 

* கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

* கடலோர கர்நாடக பகுதியில் உள்ள தொகுதிகளில் பாஜக முன்னிலை

* 11 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 120 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக 72 இடங்களிலும் மஜத 25 இடங்களிலும் இதர கட்சிகள் 07 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

* பாஜவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்பள்ளி தார்வாட் மத்தி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்

* தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 113 தொகுதிகளில் முன்னிலையும், பாஜக 73 இடங்களிலும், மஜத 29 இடங்களிலும், இதர கட்சிகள் 05 இடங்களில் முன்னிலை பெற்றும் வருகிறது. 

* டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியில் 12,542 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்

* மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாபூர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்

* கங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் தொண்டர்கள் ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். 

* முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார் 

* தினேஷ் குண்டுராவ் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு 12,622 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார் 

* ஷிகாரிபுரி தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்

* கர்நாடகாவில் உள்ள 6 மண்டலங்களில் 5-ல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது

* வருணா தொகுதியில் சித்தராமையா முன்னிலை வகித்து வருகிறார்

* மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.

* வெற்றி பெரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பெங்களூருவுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் தற்போது உத்தரவை பிறப்பித்துள்ளது.