Tamil News
Tamil News
Friday, 12 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பாஜக ஆட்சியை இழக்கும் நிலையில், அக்கட்சியின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 14 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். அமைச்சர் பதவியில் இருந்து ஒரே கட்சியை சேர்ந்த சபாநாயகர் உள்பட 14 பேர் தோல்வியடைந்திருப்பது பாஜகவின் தேசிய அரசியலையே அசைத்து பார்ப்பதாக உள்ளது. இது பாஜகவினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தோல்வி அடைந்த 14 அமைச்சர்களும் அவர்கள் போட்டியிட்ட தொகுதியின் விவரம் பின் வருமாறு; 


‣கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி  

‣ஆர்.அசோக், வருவாய்த்துறை அமைச்சர், டி.கே.சிவகுமாரை எதிர்த்து சன்னபட்னா தொகுதி (பத்மநாபநகர் தொகுதியில் வெற்றி)

‣பி.ஸ்ரீ.ராமுலு, போக்குவரத்துத் துறை அமைச்சர், பெல்லாரி ஊரகம் 

‣முருகேஷ் நிராணி, தொழில்துறை அமைச்சர், பீளகி தொகுதி 

‣வி.சோமண்ணா, வீட்டு வசதி துறை அமைச்சர், வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் - 2 இடங்களிலும் தோல்வி!

‣டாக்டர் சுதாகர், சுகாதாரத்துறை அமைச்சர், சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதி 

‣ஹாலப்பா ஆச்சார், சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர், எல்புர்கா தொகுதி 

‣எம்.டி.பி.நாகராஜ், சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர், ஒசகோட்டை தொகுதி  

‣கே.சி.நாராயண கவுடா, விளையாட்டுத்துறை அமைச்சர், கிருஷ்ணராஜ் பேட் தொகுதி 

‣பி.சி.பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர், ஹிரேகேரு தொகுதி 

‣ஜே.சி.மாதுசாமி, சட்டத்துறை அமைச்சர் - சிக்கநாயகனஹள்ளி தொகுதி  

‣சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, சிர்சி தொகுதி 

‣பி.சி.நாகேஷ், கல்வித்துறை அமைச்சர்- திப்தூர் தொகுதி  

‣சங்கர் மூனனேகுப்பா, துணி நூல் துறை அமைச்சர் நாவல்குண்ட் தொகுதி