Tamil News
Tamil News
Sunday, 14 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்தபின், தமிழக மக்களும் இந்திய மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேச ஆரம்பித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

2024 லோக்சபா தேர்தலில் பாஜக  மிகப்பெரிய வெற்றி பெறும்

"தேர்தலைப் பொறுத்தவரை ஒரு முறை ஒரு கட்சி வெற்றி பெறும், வேறொரு கட்சி தோல்வி பெறும். இது இந்திய ஜனநாயகத்தில் புதிது கிடையாது. அதேபோல் கர்நாடகாவில் 1985-க்குப் பிறகு, எந்தவொரு கட்சியும் ஆட்சியை தக்கவைக்கவில்லை. 38 ஆண்டுகளாக நடைபெறாதது இந்த முறை நடக்கும் என்று நினைத்தோம், ஆனால் நடக்கவில்லை. இருந்தாலும் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக  மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். 

எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கர்நாடக மக்கள் ஒருமித்த கருத்தோடு இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தோம். மக்களிடம் 5 கேரண்டிகளை சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவது கடினம் தான். அவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என பேசினார். 

மாற்றத்தை கொடுத்திருக்கிறார்கள்

தொடர்ந்து, கர்நாடாகாவைப் பொறுத்தவரை பாஜக கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்திருக்கிறது. மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது, அந்த மாற்றத்தை கொடுத்திருக்கிறார்கள். கர்நாடகா தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வந்து பிரச்சாரம் செய்ததால் தான் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அவர்களுக்கே தெரியும் அது உண்மையில்லை என்று. 

தமிழகத்திலும் பாஜக சரித்திரம் படைக்கும்

இறுதியாக, கர்நாடகாவில் 28 எம்.பி-க்களில் 25 பாஜக எம்.பி-க்கள் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் 28-க்கு 28 எம்.பி-க்கள் வரத்தான் போகிறார்கள். இது ராகுல் காந்தி கண் முன்னாடி நடக்கத்தான் போகிறது. 2024 தேர்தலில் தமிழகத்திலும் பாஜக சரித்திரம் படைக்கும். ஜூலை இரண்டாவது வாரத்தில் நடக்க இருக்கும் பாதயாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை எற்படுத்தும்" என்று தெரிவித்தார்.