Tamil News
Tamil News
Monday, 15 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டு, தாங்கள் விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

செந்தில் பாலாஜி மீதான வழக்கு

அதிமுக ஆட்சிக்காலத்தில் 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை அதிமுகவின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்திருப்பதாக சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, புகார் அளித்தவர்கள் செந்தில் பாலாஜியுடன் சமரசம் செய்து கொண்டார்கள் எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை முடித்து வைத்திருந்தது. 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் உரிய விசாரணை வழக்கை தொடர்ந்து நடத்துங்கள் என்ற உத்தரவை அளித்திருந்தது. இந்த உத்தரவு அமல்படுத்தவில்லை என்று சொல்லி, விசாரணையை நடத்தி வரக்கூடிய சிபிசிஐடி அமைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு வழக்கு.

தீர்ப்பு 

இன்னொரு பக்கம் இதில் முறைகேடு நடந்திருக்கிறது எங்களுக்கும் அனுமதி கொடுங்கள் நாங்களும் விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி, அமலாக்கத்துறையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ராமசுப்ரமணியன் முன்பு விரிவாக விசாரிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது தீர்ப்பானது வெளியாகி இருக்கிறது. 

முடிவு கட்டி, முதலில் இருந்து ஆரம்பம்

செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து முதலிலிருந்தே இந்த வழக்கின் விசாரணையை நடத்தலாம் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. மேலும், இன்னொரு வழக்கான சிபிசிஐடி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டு அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 

தீர்ந்த, தீராத சிக்கல் 

ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை, அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளதால் செந்தில் பாலாஜிக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால், பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அவருக்கான சிக்கலை அதிகப்படுத்தி உள்ளது.