Tamil News
Tamil News
Monday, 15 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

 

பொதுக்குழு சட்ட விதிகளை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டதையடுத்து, நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  

அதிமுக பொதுக்குழு வழக்கு

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக சட்ட விதிகைளை மாற்றி அமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்ட விதிகளை அங்கீகரிக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி தரப்பு அனுப்பி வைத்திருந்தனர். இந்த சட்ட விதிகள் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்தது. இதனால், தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றாமல் இருந்தது.   

இணையத்தில் பதிவேற்றம்

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் சட்ட விதிகளை அங்கீகரித்து அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்தநிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் குறித்த சட்டவிதிகளை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம், இனி எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவொரு சிக்கலும் வரப்போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. 

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டதையடுத்து, நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது. கூட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் பற்றியான விவாதங்கள், அதிமுக உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு பற்றியான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.