Tamil News
Tamil News
Tuesday, 16 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

கரூர் கம்பெனி குறித்த கேள்விக்கு செய்தியாளகள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாகி திணறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாரய மரணம் 

தமிழநாட்டின் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில், கள்ளச்சாரயம் அருந்தி 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக ம்து விற்கப்படுவதாலும், கள்ளச்சாரய விற்பனை அதிகரிப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜி, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அளித்த புகார் குறித்து விளக்கமளித்தார். அதாவது தமிழ்நாடில் டாஸ்மாக் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெறுவதாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் புகார் அளித்துள்ளார். ஆனால் டாஸ்மாக் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 93 ஆயிரம் கோடி மட்டுமே வருமானம் வந்துள்ளது, அப்படி இருக்கையில், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் எப்படி ஊழல் நடைபெறும் என செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். மேலும் புதியதமிழகம் கட்சி கிருஷ்ணசாமி தேர்தல் நெருங்கும் நேரங்களில் மட்டும் தனது இருப்பை காண்பிக்க அரசியல் செய்கிறார் என விமர்சனம் செய்தார்.

கரூர் கம்பெனி

பின்னர் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கப்படுவ்தாகவும், ஏன் வாங்குகிறீர்கள் எனக் கேட்டால் கரூர் கம்பெனிக்காகத்தான் வாங்குகிறோம் என டாஸ்மாக் ஊழியர்கள் கூறுவதாகவும், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் செந்தில் பாலாஜி, பதில் சொல்ல திணறினார். பின்னர் எந்த கடையில், யார் வாங்கினார்கள் எனக் கூறுங்கள், பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது என செய்தியாளர்களை கடிந்துகொண்டார். மேலும் அதில் ஒரு செய்தியாளர் நேற்றைய தினம் அவர் வாங்கிய கடையிலேயே பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக கட்டணம் செலுத்திதாக கூறினார், மேலும் எல்லாக் கடைகளிலும் இதே நிலைமை இருப்ப்தாக புகார் அளித்தார். அதற்கு ஆவேசமான செந்தில் பாலாஜி, 5000 கடைகளுக்கும் சென்று மது வாங்கியிருக்கிறீர்களா? ஒன்று இரண்டு கடைகளில் நடக்கும் தவறுக்காக அனைத்து கடைகளையும் குறைகூறக்கூடாது எனத் தெரிவித்தார். மேலும் தவறு செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் செந்தில் பாலாஜி கூறினார்.