Tamil News
Tamil News
Friday, 19 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஆர்டிஇ இடஒதுக்கீட்டில் சேரும் மாணாக்கர்களின் செலவை அரசே ஏற்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குடியாத்தம் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தன்னுடைய மகனை ஆர்டிஇ சட்டத்தின் மூலம் சேர்ந்த்துள்ளார். அந்த மாணவனிடம் புத்தகத்திற்கும், சீருடைக்கும் சேர்த்து 11,900 ரூபாயாக பள்ளி நிர்வாகம் கேட்டதாக அந்த மாணவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரிக்கப்பட்டது. 

விசாரணையின் முடிவில், நீதிபதி முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார். தீர்ப்பில், "கல்வி உரிமை சட்டத்தில் 25% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும்" என்றும், ஆர்டிஇ சட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணாக்கருக்கான செலவை அரசு தான் ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சீருடை, பாடநூல்கள் தருவது அரசின் கடமை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.  

இறுதியாக, உரிய அறிவுரைகளை 2 வாரத்தில் பிறப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்டிஇ சட்டத்தின்கீழ் மாணவனைச் சேர்த்த தந்தை ஒருவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.