Tamil News
Tamil News
Friday, 19 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி

ஜப்பானின் ஹீரோஷிமா நகரில் ஜி - 7 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில், ஜி - 7ன் உறுப்பு நாடுகளான கனடா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், இந்தியா உறுப்பினராக இல்லாதபோதும்,  சிறப்பு அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு சென்று கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜி7 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அப்போது சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். 

ஜெலன்ஸ்கியுடன் மோடி சந்திப்பு

உலக நாடுகளை பரபரப்பாக்கிய ரஷ்யா - உக்ரைன் இடையேயான போருக்கு பிறகு ஜெலன்ஸ்கி உலகத் தலைவர்களுடன் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரதமர் மோடியும் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஹீரோஷீமா நகரில் இன்று சந்தித்து பேசினர். இதற்கு முன்பு போர் நடைபெற்ற சமயத்தில் தொலைபேசியில் பேசி வந்தனர். தற்போதைய சந்திப்பின்போது, போருக்கான தீர்வு உதவிடும் வகையிலும், உக்ரைனின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகை செய்யவும், உதவி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.