Tamil News
Tamil News
Sunday, 21 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் தமிழக அரசு

வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் துபாய் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த துபாய் பயணத்தின் மூலமாக ரூ.6,100 கோடி முதலீடும், 15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் செல்லும் முதலமைச்சர் 

இதைத்தொடர்ந்து, ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்க நாளை சிங்கப்பூர் செல்ல முடிவு செய்துள்ளார். அங்கிருந்து ஜப்பான் செல்லும் வகையில் பயண திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தொழில் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த தொழில் ஒப்பந்தங்கள் தொடர்பாக  தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இரு தினங்களுக்கு சிங்கப்பூர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொழிலதிபர்களுடன் சந்திப்பு

இதனையடுத்த தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க நாளை காலை 11.25க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்று, அங்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடனான சந்திப்பில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.