Tamil News
Tamil News
Tuesday, 23 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச பயணம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் தற்போதைய நடைமுறைபடி 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை. அதேபோல், 12 வரையிலான குழந்தைகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


அரை டிக்கெட் அனுமதி 5 வயது முதல் 12 வயதாக உயர்வு

இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- பேருந்துகளில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது. மாவட்ட விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.