Tamil News
Tamil News
Tuesday, 23 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது; 

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா

நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தலைவராக இருக்கக்கூடியவர் குடியரசு தலைவர். எனவே குடியரசு தலைவர் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். இந்த திறப்பு விழாவில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள போவதில்லை. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறோம்.

இந்தியா முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும்

மே 28ஆம் தேதி அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள் மே 28 சாவர்க்கரின் பிறந்த நாள். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஹிஜாப் விவகாரத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பை முழுவதுமாக பிஜேபி கர்நாடகாவில் நிலைநாட்டினார்கள்.  இந்த தேர்தல் முடிவு ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தும்.

மதுவிலக்கு வேண்டும்

கள்ளச்சாராய் இறப்பு மிகவும் மன வேதனை அளிக்கிறது. மதுவிலக்கை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள். விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய விடாமல் செய்பவர்கள் பாமகவினர் தான். அவர்கள் தான் சனாதன சக்திகள் வேரூண்ட காரணமாக இருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தை பொறுத்தவரை மூன்றாவது அணி அமைய வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வேலை அமைந்தால் அது சனாதன சக்திகள் தமிழகத்தில் காலூன்றுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தெரிவித்தார்.