Tamil News
Tamil News
Thursday, 25 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை

திருச்சியில் மாவட்ட கல்வி அலுவலா்களுடன் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைய வழியில் ஆலோசனை நடத்தினாா். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது, தமிழ் கட்டாய பாடம் தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தினார். 


முதலமைச்சர் முடிவெடுப்பார்

இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முதலமைச்சருடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என தொிவித்தாா். முன்னதாக, தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிகள் திறப்பு தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்திருந்தார். 

ஜூன் 7 ல் பள்ளிகள் திறப்பு

இதனிடையே முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.