Tamil News
Tamil News
Thursday, 25 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க வேண்டும் - மனு

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான்  திறந்து வைக்க வேண்டும் என்று திறப்பு விழாவை 21 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், நேற்று மே 25-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க வேண்டும் என்று ஜெய் சுகேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் தாக்கல் செய்திருந்தார்.  

மனுவில், "இந்திய அரசியலமைப்பு 79-ன் படி, குடியரசுத் தலைவர் தான் ஒரு நாடாளுமன்ற கூட்டுக்குழுவை திறந்து வைக்கிறார், நாடாளுமன்றம் அனுப்பக்கூடிய சட்டங்களுக்கு அவர் தான் ஒப்புதல் அளிக்கின்றார், நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமாக இருக்கக்கூடியவர் குடியரசுத் தலைவர் தான் என்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் வைத்து திறக்க கோரி" மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், "குடியரசுத் தலைவர் தலைமையில் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்க வேண்டும், பிரதமர் திறந்து வைப்பது சரியானது அல்ல, நாட்டின் முதல் குடிமகன் என்கிற அடிப்படையில் குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்" என்று அவர் மனுவில் வலியுறுத்தி இருந்தார். 

மனுவை விசாரிக்க மறுப்பு

இந்த வழக்கு உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வான நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இது என்ன மாதிரியான மனு, தாக்கல் செய்ததற்கு உங்களுக்கு அபராதம் விதிக்கப்போகிறோம் என்று நீதிபதிகள் எச்சரிக்கை கொடுத்தனர். பின்னர், மனுதாரரிடம் நீங்கள் என்ன காரணத்திற்காக இந்த மனுவை தாக்கல் செய்தீர்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். பிறகு, மனுதாரர், நீங்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்தால் இந்த மனுவை திறும்ப பெற்றுக்கொள்கிறேன் என்று மனுதாரர் தெரிவித்தார். 

பிரதமர் மோடி திறக்க தடையில்லை

இறுதியாக, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என மறுப்பு தெரிவித்து, மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். மனுதாரரும் மனுவை திறும்ப பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசி ஆதாயமாக இருந்த உச்சநீதிமன்றமும், தற்போது கட்டிட திறப்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க தடையில்லை என்பது வெட்டவெளிச்சமாகிறது.