Tamil News
Tamil News
Sunday, 28 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது 24 அமைச்சர்களுக்கான இலாக்காக்களை முதலமைச்சர் சித்தராமையா ஒதுக்கீடு செய்துள்ளார். அந்தவகையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, உளவுத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்ப்பாசனத்துறை, பெங்களூரு நகரவளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பரமேஸ்வாராவிற்கு உளவுத்துறை தவிர்த்த உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எச்.கே.பாட்டிலுக்கு சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள், சட்டம் மற்றும் சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முனியப்பாவிற்கு உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ராமலிங்க ரெட்டிக்கு போக்குவரத்துறையும் எம்.பி. பாட்டிலுக்கு நடுத்தர மற்றும் பெரிய தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. கே.ஜே. ஜார்ஜிற்கு எரிசக்தித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தினேஷ் குண்டுராவிற்கு குடும்பநலத்துறையும், எச்.சி.மஹாதேவப்பாவிற்கு சமூகநலத்துறையும், சதீஷ் ஜார்கிஹோலிக்கு பொதுப்பணி துறையும், கிருஷ்ண பைரே கவுடாவிற்கு வருவாய்த் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கேவிற்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், சிவனந்த பாட்டிலுக்கு ஜவுளி, கரும்பு வளர்ச்சி மற்றும் சர்க்கரை இயக்குநரகம்,மற்றும் கூட்டுறவுத் துறையின் வேளாண் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு. 

சமீர் அகமது கானுக்கு வீட்டு வசதி வஃபு மற்றும் சிறுபான்மையினர் நலன், சரணப்பா சிறு தொழில்கள், பொது நிறுவனங்கள் துறையும், ஈஷ்வர் காந்த்ரேவிற்கு காடு, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. என்.செலுவராயசுவாமி விவசாயம், எஸ்.எஸ். மல்லிகார்ஜூனுக்கு சுரங்கம் மற்றும் புவியியல், தோட்டக்கலைதுறை ஒதுக்கப்பட்டுள்ளது. ரஹீம் கானுக்கு நகராட்சி நிர்வாகம், சரண் பிரகாஷ் ருத்ரப்பா பாட்டிலுக்கு மருத்துவ கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கே. வெங்கட்ஷ்-க்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பட்டு வளர்ப்புத்துறையும், சிவராஜ் தங்கடகிக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  கன்னடம் மற்றும் கலாச்சாரதுறை ஒதுக்கப்பட்டுள்ளது. டி.சுதாகருக்கு திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறையும், பி.நாகேந்திராவிற்கு இளைஞர் சேவை விளையாட்டு மற்றும் பழங்குடியினர் நலன் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கே.என். ராஜண்ணாவுக்கு வேளாண் விற்பனையைத் தவிர்த்து கூட்டுறவு ஒதுக்கப்பட்டுள்ளது. சுரேஷ் பி.எஸ். பெங்களூரு நகர மேம்பாட்டை தவிர்த்து நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர திட்டமிடல் ஒதுக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மி ஆர் ஹெப்பால்கருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகாரமளித்தல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

மங்கள் வைத்யாவிற்கு மீன்பிடி மற்றும் துறைமுகங்கள், உள்நாட்டு போக்குவரத்தும், எம்.சி.சுதாகருக்கு உயர்கல்வித்துறையும், என்.எஸ்.போஸ்ராஜூவுக்கு சிறு நீர்ப்பாசனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.