Tamil News
Tamil News
Sunday, 28 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன போரட்டம்

தமிழகத்தில் தொடரும் திமுக அரசின் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்குசீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும், இவைகளுக்கு முழு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

திமுகவை கண்டித்து முழக்கம்

அதன் ஒரு பகுதியாக திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே திருச்சி மாநகர்  மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார்பில் மாநில இளஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மனேகரன், ரத்தினவேல், பூபதி, மலைக்கோட்டை ஐயப்பன் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.