Tamil News
Tamil News
Tuesday, 30 May 2023 00:00 am
Tamil News

Tamil News

ஐபிஎல் என்றாலே ஆரவாரம்தான். அதிலும், ஐபிஎல் இறுதிப்போட்டி என்றால் சற்றும் ஆரவாரம் அதிகமாகத்தான் இருக்கும். அதிலும், சிஎஸ்கே இறுதிப்போட்டியில் விளையாடி வந்தால் ஒரு பக்கம் ஆரவாரமும் இருக்கும், இன்னொரு பக்கம் பிபியும் எகிரிட்டு இருக்கும். அப்படி இருந்ததுதான் நேற்றைய ஆட்டமான சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கான போட்டி. ஒரு டி20 போட்டி மூன்று நாள் நடைபெற்றது இது தான் முதல்முறை. எப்படியோ முதலில் விளையாடிய குஜராத் அணி 214 ரன் அடிச்சு, சிஎஸ்கே அணிக்கு பிபிய ஏத்தி விட்டுட்டு போய்டுச்சு. பிறகு, களமிறங்கிய சிஎஸ்கே அணி ஆரம்பிச்சதுமே மழையால தடை பட்டு போச்சு. நேரம் ஆக ஆக சிஎஸ்கே அணிக்கு ஓவர் குறையுது, இன்னொரு பக்கம்  சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிபி எகிருது. கடைசியா 15 ஓவருக்கு 171 இலக்கா வச்சு ஆட ஆரம்பிசாங்க சிஎஸ்கே அணி. 

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் - கான்வே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாங்க. அடுத்தடுத்து விளையாடிய சிவம் துபே, அம்பத்தி ராயுடு சிஎஸ்கே வெற்றிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தாங்க. எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருந்த தோனி களமிறங்கியதும் ஸ்டேடியமே அதிர உள்ள நடந்து வர, வந்த ஸ்பீடுல டக் அவுட் ஆகி ரிடர்ன் போனபோது சிஎஸ்கே ரசிகர்கள் முகத்துல கலையே போயிடுச்சு. தோனிக்கு அப்புறம் களமிறங்கிய ஜடேஜா தான் சிஎஸ்கே 2023 சாம்பியனுக்கு காரணமா அமைந்தாரு. 

கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது, ஒரு பால் சிக்ஸ் அடிச்சு, இன்னொரு பால் போஃர் அடிச்சு சிஸ்கேவுக்கு வெற்றிய கொடுத்தாரு. அப்போ சிஎஸ்கே ரசிகர்களுக்கு வராதா கண்ணீரும் இல்ல, வெளிப்படுத்தாத ஆனந்தமும் இல்ல, ஆரவாரம் அமர்க்களமா மாறுச்சு. 

இந்தநிலையில, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ன சொல்லிருக்காருன்னா, நேற்றைய ஆட்டத்துல சிஎஸ்கே ஜெயிச்சது ஜடேஜா தான் காரணம் அப்டின்னு சொல்லிருக்காரு. அட, அதுதான உண்மை, ஜடேஜா தான் காரணம் அதுல என்ன சந்தேகம் அப்டின்னு நீங்க கேக்கலாம். அட, நா சொல்றத முழுசா கேளுங்க, அண்ணாமலை என்ன சொன்னாருன்னா நேற்றைய ஆட்டத்துல சிஎஸ்கே ஜெயிச்சதுக்கு காரணமே பாஜக தான் அப்டின்னும், சிஎஸ்கே-வை வெற்றி பெற வைத்தது ஒரு பிஜேபி காரியகர்த்தா அப்டின்னு பேசியிருக்காரு. அவரு சொன்னத முழுசா சொல்றேன் கேளுங்க;         

"சிஎஸ்கே-வை வெற்றி பெற வைத்தது ஒரு பிஜேபி காரியகர்த்தா. ஜடேஜா பிஜேபி காரியகர்த்தா, அவருடைய மனைவி பிஜேபி எம்.எல்.ஏ, ஜடேஜா குஜராத்தைச் சேர்ந்தவர். தமிழனாக பெறுமைப்படுகின்றேன். ஆனால், சிஎஸ்கே டீமைவிட குஜராத் அணியில் தமிழர்கள் அதிகம். அதையும் கொண்டாடனும். 96 ரன்கள் அடித்த சாய் சுதர்சன் ஒரு தமிழர் அதையும் கொண்டாடனும். சிஎஸ்கே-வில் ஒரு தமிழர் கூட கிடையாது. ஆனாலும், நம்ம கொண்டாடுகிறோம், காரணம் தோனிக்காக. கடைசி ரன்னில் சிஎஸ்கேவை ஜெயிக்க வைத்தது ஒரு பிஜேபியின் காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமைப்படுகின்றோம். அதேதான், 2024-ல் தமிழ்நாட்டில் நடக்கும்" அப்டின்னு சொல்லிருக்காருங்க. 

இதகேட்ட ஒரு சில பேர் ஐபிஎல் போட்டியை தான் அரசியல் பண்ணுனிங்க, இப்போ ஐபிஎல் வீரர்களையும் வச்சு அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா அப்டின்னு சமூக வலைதளங்கள்ல கேக்க ஆரம்பிச்சுருக்காங்க. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோட கருத்தை எப்படி பார்ப்பது என்பதை வாசகர்களான உங்களுடைய கவனுத்துக்கே நான் விட்டுடுறேன்...