Tamil News
Tamil News
Monday, 29 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

அகமதாபாத்தில் நடந்த சென்னை - குஜராத் இடையேயான இறுதி போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்று 5 வது முறையாக கோப்பையை தனதாக்கியது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எல்லா சூழ்நிலையிலும், ஒரு திட்டத்துடன் களமிறங்கும் தோனியில் தலைமையின் கீழ் கோப்பையை வென்ற மஞ்சள் படைக்கு வாழ்த்துகள், இது மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டி.. இதில் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்."

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை

சிறந்த இறுதி போட்டிகளில் தற்போது நடந்த ஐபிஎல் இறுதி போட்டியும் ஒன்று; சென்னை அணிக்கு வாழ்த்துகள்;, குஜராத் அடுத்த வருடம் குஜரத் வலிமையுடன் வரவேண்டும்; 

லக்னோ ஆலோசகர் கௌதம் காம்பீர்

ஒருமுறை கோப்பையை வெல்வதே கடிமானது. இதில், 5 முறை கோப்பையையை வென்றிருப்பது நம்பமுடியாத சாதனை; சென்னை அணிக்கு வாழ்த்துகள்

சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா

சிஎஸ்கே என்னும் பெரிய குடும்பத்தின் அங்கமாக இருந்ததை எண்ணி பெருமைபடுகிறேன். இந்த வெற்றி ஒரு அற்புதமான பயணத்தின் உச்சம். இந்த பயணம் தொடரும்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 

5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற தோனி மற்றும் சிஎஸ்கே குழுவிற்கு வாழ்த்துக்கள். இனி வரும் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன். 

தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.