Tamil News
Tamil News
Wednesday, 31 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

உத்தரவை மீறிய தனியார் பள்ளிகள்

கோடைக்கால வெயிலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 1 க்கு பதிலாக ஜூன் 7 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் திறக்கப்படுவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தனர். அந்தவகையில், சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி இன்று அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டதாக கூறப்படுகிறாது. இது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கூறியதாவது:-

மாவட்ட வாரியாக விசாரணை

கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறோம். முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது. அதை மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மாவட்டவாரியாக இதுபற்றி விசாரித்து வருகின்றனர். என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.