Tamil News
Tamil News
Friday, 02 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

நாட்டை உலுக்கிய கோர விபத்து 

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த கோர விபத்தில் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் கூறிய முதலமைச்சர்; 

இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படும் 

ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படும். இன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சிகள் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி

விபத்து குறித்த தகவல்களைப் பெற 1070, 94458 69843, 94458 69848 (வாட்சாப்) ஆகிய உதவி எண்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 
மாண்புமிகு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனடியாக ஒடிசா சென்று, அங்குள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலையை அறிந்து, மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த உள்ளனர். விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாயும், தீவிர காயமுற்றோருக்கு 1 இலட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும். என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஒடிசா முதலமைச்சரிடம் பேசினேன்...

முன்னதாக நேற்றிரவு விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது; ஒடிசா மாநிலத்தில்  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்  விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர்  நவீன்பட்நாயக் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என கூறியிருந்தார்.